2025 மே 21, புதன்கிழமை

மு.காவின் மாநாட்டை பகிஷ்கரித்தார் ஹசன் அலி

Thipaan   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்டுள்ள இம்மாநாட்டில், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றவில்லை.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படாமையினால் அவர் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு, அதிருபதியுற்ற நிலையில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக ஹசன் அலியுடன் சேர்ந்து இவரும் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. இம்முறை பஷீர் சேகுதாவூத்துக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .