2025 மே 19, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் திருடியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மோட்டார் சைக்கிளொன்றதைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, திங்கட்கிழமை (01) உத்தரவிட்டார்.

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் தனது வர்த்தக நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளை  கடந்த சனிக்கிழமை (30) நிறுத்திவிட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இதன் பின்னர் மதியவேளை உணவுக்காக வீடு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை எடுக்கச்சென்றபோது, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

இது தொடர்பில் பொலிஸில் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் முறைப்பாடும் செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடியவர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளை குறித்த வர்த்தக நிலையத்துக்கு முன்பான நிறுத்தியதை வர்த்தக நிலையத்தில் தொழில் புரியும் ஒருவர் கண்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, 27 வயதுடைய இச்சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X