Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமா மில் வீதி, கொம்மாதுறையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 07 மணியளவில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை தில்லையம்மா எனும் 65 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி வயோதிப பெண், உள்வீதியிலுள்ள கடைக்குச் சென்று தனது பேரப்பிள்ளைக்கு சூப்பி வாங்கிக்கொண்டு திரும்பிய வேளை, இலக்கத் தகடில்லாத மோட்டார்சைக்கிளை கண்மூடித் தனமாக செலுத்தி வந்த நபரெருவர், வயோதிப பெண் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த வயோதிப பெண்ணை, உறவினர்களும் அயலவர்களும் சேர்ந்து செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வழியிலேயே குறித்த வயோதிப பெண் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே இலக்கத் தகடில்லாத மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து மோதிய நபர், மோட்டார்சைக்கிளைக் கைவிட்டு தலைமறைவாகியமையினால் பொலிஸார் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர், சமீபத்தில்தான் கட்டார் நாட்டிலிருந்து வந்து புதிய மோட்டார்சைக்கிளை கொள்வனவு செய்தவர் என்றும் சம்பவம் இடம்பெற்ற போது மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரான் பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட சந்தேகநபரைத் தேடி வலைவிரித்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
01 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Oct 2025