Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில், இன்று (21) அதிகாலை 3 மணயளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் என்று, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவு ஏ.சீ. பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ. முகம்மது இர்பான் (வயது 22) என்பவரே உயிரந்துள்ளார்.
பள்ளிக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் மின்னொலி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு வரும் வேளையிலேயே, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின்; பின்னால் இருந்து வந்த இளைஞரே உயிரிழந்துள்ளார் என்றும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபர் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
27 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
41 minute ago