2025 மே 03, சனிக்கிழமை

மாணவர்களை இலக்கு வைத்து 'போதை வியாபாரம் செய்வது துரோகமாகும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் செய்வது துரோகமாகும் என அம்பாறை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (05) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போதைப்பொருளை ஒழிப்போம், நிம்மதியான வாழ்வை வாழ்வோம் என்று இன்றைய சூழலில் அனைவரும் கூறிக் கொண்டிருக்கும்போது, இளைஞர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாவது வருந்தத்தக்க விடயமாகும்.

இம்மாதிரியான மாணவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கி, அப்பழக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதோடு, பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர்' என்றார்.  

'இப்பொழுது வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப்பொருள்; சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது.

இத்தகைய கடத்தல்; மேற்கொள்ளப்படுவதாலும், இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதாலும், இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறி வருகின்றது.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீமை பற்றி  மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்கால இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளல் கட்டாயமாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X