Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள் மற்றும் அங்காடி வியாபார நிலையங்களில் உள்ள நிறுத்தல் அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (06) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இச் சேவை நாளை 07 மற்றும் நாளை மறுதினம் 08ம் திகதி வரையும் நடைபெறுமென அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.
தீகவாபி, அட்டாளச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள உள்ள கூட்டுறவு சங்கங்கள், தனியார் வர்த்தக நிலையங்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் தங்களது நிறுக்கும், அளக்கும் உபகரணங்களுக்கு முத்திரை பதித்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago