2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மாதாந்த உதவி கொடுப்பனவு வழங்கல்

Kogilavani   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 225 மாணவர்களுக்கு கல்விக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

மெஸ்றோ நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

அத்துடன் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, கல்முனை மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.ஏகாம்பரம் உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது மாணவர்களுக்கான கொடுப்பனவுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம் என்பன அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹமட் இத்திட்டத்துக்காக 5 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இதற்காக அவர், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கல்வி சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X