2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

முதிரைக் குற்றிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு வேலாத்தைப் பிள்ளையார் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட முதிரைமரக் குற்றிகள் 22ஐ இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் காட்டு மரங்களை வெட்டி வியாபார நோக்கமாக வெளியிடங்களுக்கு கடத்துவதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அப்பகுதியில் தேடுதல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே, மேற்படி மரக்குற்றிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இம்மரக் குற்றிகளை ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X