2025 மே 22, வியாழக்கிழமை

மின்சாரத் தேவைக்காக நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும்; கிராமிய மின்சாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக 16 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், இன்று செவ்வாய்க்கிழமை  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்துக்கு 08 மில்லியன் ரூபாயும்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கு 05 மில்லியன் ரூபாயும்  திருகோணமலை மாவட்டத்துக்கு 03 மில்லியன் ரூபாயும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற மக்களின் மின்சாரத் தேவையை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X