2025 மே 22, வியாழக்கிழமை

மின்சாரவேலி அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கமாங்கண்டிப் பிரதேசம் முதல் சாகாமம் பிரதேசம் வரையான 45 கிலோமீற்றர் தூரத்துக்கு மின்சாரவேலி அமைப்பதற்கு 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் திருக்கோவில் பிரிவுக்கான பொறுப்பதிகாரி ஏ.ஏ.அலீம், இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது இரண்டு மாதங்களுக்குள் பூர்த்தியாகுமெனவும் அவர் கூறினார்.
மேலும், சாகாமம் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றுப் பிரசேத்திலுள்ள ஆலிம் நகர் வரை 10 கிலோமீற்றர் தூரத்துக்கு மின்சாரவேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான திருக்கோவில், சங்கமாங்கண்டி, சாகாமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை காணப்படுகின்றது. இந்த யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், மின்சாரவேலி அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X