2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீளவும் நெற்செய்கை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட துக்கள்ள விவசாயக் காணிகளில் மீளவும் நெற்செய்கை மேற்கொள்வதற்கு ஆவன செய்யுமாறு துக்கள்ள விவசாய அமைப்பின் தலைவர் எம்.எஸ்.சம்சுடீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான அம்பாறை மாவட்டச் செயலணிக்கு இது தொடர்பான மகஜரை இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை துக்கள்ள விவசாயக் காணிகளில் விவசாயச்செய்கை பண்ணமுடியாமல், சுமார் 37 குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்களுக்குச் சொந்தமான காணியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்யாமையால் அக்காணிகளில் பற்றைகள் வளர்ந்துள்ளன. இந்நிலையில், எங்களின் காணிகளை துப்புரவு செய்வதற்குச்; சென்றால், வன இலாகா அதிகாரிகள் எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'எனவே, எங்களின் காணிகளைத் துப்புரவு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும், யுத்தம் காரணமாக நெற்செய்கை பண்ண முடியாதுபோன 1984ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையான காலத்துக்கு நட்டஈட்டையும் காணிகளைத் துப்புரவு செய்வதற்கான செலவையும் வழங்குவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X