Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாட்டிலிருந்து ஹஜ் கடமைக்காக மக்கா நோக்கிச் செல்லுபவர்கள் நாட்டின் நிரந்தர அமைதி, சமாதானம், சகவாழ்வு என்பவற்றுக்காகப் பிராத்திக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செயிலுலாப்தீன் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் குல்லியத்துல் தாறுல் உலூம் அரபுக்கல்லூரியில், ஞாயிற்றுக்கிழமை (14), நடைபெற்ற இந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'ஹஜ்' கடமை இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையாகும். அதனை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் அனைவரும் நாட்டின் நிரந்தர அமைதி, சமாதனம், சகவாழ்வு என்பவற்றுக்காகப் பிராத்திக்க வேண்டும்.
நாங்கள் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றோம். இந்நிலை நாட்டில் தொடர்ந்திருக்க வேண்டும். ஹஜ் காலத்தில் ,'மக்கா', 'மதீனா' மற்றும் 'மினா அரபா' போன்ற புனித இடங்களில் கூடுதலாக கடமை (பர்ல்) ஆன தொழுகைகளை நிறைவேற்றுவதுடன் அல்-குர்; ஆனை ஒத வேண்டும். அந்த பிராத்தனையில் நமது நாட்டுக்காவும் பிராத்தனை செய்ய வேண்டும் என்றார்.
முதலமைச்சரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வைபவத்தில் முக்கியஸ்தர்கள் உலமாக்கள் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago