அஸ்லம் எஸ்.மௌலானா / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண், பெண் கலப்புப் பாடசாலையான சாய்ந்தமருது, மல்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயத்தை, மகளிர் பாடசாலையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்துள்ளார்.
இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையேற்றே, அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில், நேற்று முன்தினம் (30) இரவு நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பாடசாலைச் சமூகம் சார்பாக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பங்கேற்றிருந்தார்.
இதன்போது அதிபர் உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்களால் பாடசாலையில் நீலவும் குறைபாடுகள், தேவைகள் குறித்து விவரமாக எடுத்துக் கூறி, பிரதியமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பாடசாலைக்கு நுழைவாயில் கோபுரம், ஆராதனை மண்டபம் உள்ளிட்ட உள்ளக அபிவிருத்திகளை செய்து தருமாறும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை கட்டம், கட்டமாக நிறைவு செய்து தருவதாகவும் பிரதியமைச்சர் ஹரீஸ் உறுதியளித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026