2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’மக்களுக்கு சேவை செய்ய விடாததால் மு.காவிலிருந்து விலகினேன்’

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு நிலையிலும் மக்களுக்குச் சேவை செயவதற்குரிய அரசியல் அங்கிகாரத்தை தனக்கு வழங்கவில்லையென்பதால் கட்சியை விட்டு வெளியேறியதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதையடுத்து நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை. குறிப்பாக, அம்பாறை மாவட்ட மக்களின் பேராதரவைப் பெற்ற அந்தக் கட்சி, அம்மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளைக் கூட தீர்ப்பதற்கு முனையவில்லை.

“முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்திற் கொள்ளாத அந்தக் கட்சியில் பயணித்து பதவிகளை மாத்திரம் அலங்கரிப்பதை விட சமூகத்தின் நன்மை கருதி, அக்கட்சியிலிருந்து வெளியேறுவது சிறந்தது என நினைக்கின்றேன். அதனால், தான் வகித்த சகல பதவிகளையும் துறந்துவிட்டு, அக்கட்சியில் இருந்து ஒதுங்கியுள்ளேன்.

“எனது சேவையில் ஒருபோதும் இனவாதம், பிரதேசவாதம் இருந்ததில்லை. கொந்தராத்தினை இலக்காகக் கொண்டு நான் அரசியலுக்கு வரவுமில்லை.எனது அரசியல், சமூக சேவைச் செயற்பாடுகள் சம்மாந்துறை தொகுதியிலே அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“அதனால் கட்சிக்குள் இருந்துகொண்டே எனக்கெதிராக செயற்படு கின்றனர். எனது சமூக சேவைப் பணிக்குத் தடையாக இருக்கின்ற அந்தக்கட்சியில் பயணிப்பதனைதை விட, அங்கிருந்து ஒதுங்கி மக்களுக்கு பணி செய்வதற்கு எண்ணியுள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X