2025 மே 14, புதன்கிழமை

‘மக்களை பாதுகாக்க முன்வர வேண்டும்’

Editorial   / 2020 மே 20 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா 

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கெதிராக, அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டுமென, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எம். பண்டாரநாயக வேண்டுகோள் விடுத்தார்.

வைரஸ் தாக்கத்துக்கெதிராக அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுப்பட்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பில், மாவட்டச் செயலகத்தில் இன்று (20) கலந்துரையாடப்பட்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாறை - நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பரின் வழிகாட்டலின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் அரச திணைக்களங்கள், நிறுவனங்கள், இராணுவ முகாம்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துப் பொருள்களை விநியோகிக்கப்படுகின்றன.

இதற்கமைய, மாவட்டச் செயலாளர்  பண்டாரநாயகவின் நேற்றைய சந்திப்பையடுத்து, 24ஆவது இராணுவ முகாமின் மேஜர் ஜெனரல் ஜேசிகமகே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.பி.ஜயந்த ரத்நாயக, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஐ.எல்.எம்.றசீட் ஆகியோருடனான கலந்துரையாடலும், ஆயுர்வேத மருந்துப் பொருள்கள் கையளிக்கப்பட்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .