Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
வி.சுகிர்தகுமார் / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் எனத் தனித் தனியாக மக்களைப் பிரிவுபடுத்தி, இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாதென, கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.
அவ்வாறு எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின்பேரில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த முப்பது வருட காலம் மிகவும் துக்கமானதுடன் அனைத்து அபிவிருத்திகளும் தடைப்பட்ட காலம். குறிப்பாக தமிழர்களே இதனால் பாதிக்கப்பட்டனர். ஆகவே, இனிவரும் காலங்களில் குறித்த அபிவிருத்திகள் யாவும் சிறப்பாக முன்னெடுக்கப்படுமென உறுதியளித்தார்.
இங்கு உரையாற்றிய கோடீஸ்வரன் எம்.பி, அமைச்சரின் இந்த விஜயத்தினூடாக விவசாயம், மீன்பிடி, கால்நடை, நீர்ப்பாசனம் போன்றவற்றில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுமென, நம்பிக்கை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago