Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுமார் 262 பேர் டெங்கு நுளம்புத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் இளம் குடும்பத் தலைவி ஒருவரும் பலியாகியுள்ளதாகத் தெரிவித்த அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர், டெங்கற்ற பிரதேசமாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் மக்களின் பங்களிப்பு மிக முக்கியமான தேவைப்பாடாக உள்ளதென்றார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்விஷேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று(31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல்வேறு நிறுவனங்களையும் ஒன்றிணைந்து பாரிய டெங்குக் கட்டுப்பாட்டு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அக்கரைப்பற்று ஐந்தாம் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் இளம் தாய் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியிருப்பது எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது.
நமது மக்கள் ஏனோதானோ என்று இவ்விடயத்தில் அக்கறை செலுத்தாமல் அசிரத்தையுடன் நடந்து கொள்வோமேயாக இருந்தால் டெங்கு நுளம்புப் பெருக்கத்தை நாம் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது போய்விடும்.
ஆகையால் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்றார்.
சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம், அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், மாநகர சபை மற்றும் சமூக மட்ட அமைப்புகள் போன்றவன தமது பங்களிப்புகளை நல்கியிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025