2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மதிக்கும் வரை உரிமை கிடைக்காது

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,பைஷல் இஸ்மாயில்

“வடக்கு மலையகத்தையும் மலையகம்  கிழக்கையும் மதிக்கும் வரை சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மேலும், “சிறுபான்மையினர் தமது சக சமூகத்தினரது  அபிலாஷைகள் மற்றும் அடையாளங்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொத்துவில்  மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழா, செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சிறுபான்மையினர் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வதன் மூலமே தமது சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும்.

இனவாதத்தை கக்கும் குழுக்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்  மாத்திரமன்றி  தற்போதைய நல்லாட்சியிலும் செயற்பட்டு வருகின்றன. அவர்களை அடையாளங்கண்டு மக்கள் தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X