2025 மே 22, வியாழக்கிழமை

மதிலை உடைத்துப் பாய்ந்த உயவு இயந்திரம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் - தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (05) இரவு 07 மணியளவில் உழவு இயந்திரமொன்று, மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். 

நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த உழவு இயந்திரம், எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி உயிராபத்தைத் தவிர்க்கும் பொருட்டு சடுதியாக திசை திருப்பும்போது வீதியோரமாக இருந்த வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு பாய்ந்தது.

இந்த விபத்தில் உயிராபத்து எதுவும் ஏற்படவில்லையெனத் தெரிவித்த திருக்கோவில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X