Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயை முற்றாக அழித்தொழிக்கும் விசேட வேலைத்திட்டமொன்று, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதஸ்தலங்களின் சுற்றுப்புறச்சூழலைச் சுத்தமாக்கி, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டு வருவதுடன், டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைக் கொண்டுள்ள மதஸ்தலங்களின் சூழலை வைத்திருந்த அதன் பரிபாலன சபையினருக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வேலைத்திட்டத்தில், சுகாதாரத் துறையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நுளம்பு தடுப்புப் பிரிவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.
இவ்வேலைத்திட்டத்தின் மூலம், மதஸ்தலங்கள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களின் சுற்றுப்புறச்சூழல், வடிகான்கள், கால்வாய்கள், நீரேந்து பிரதேசங்கள் போன்றன சுத்தப்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்புகள் உண்டாகும் சூழலும் இடங்களும் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன.
வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழை பெய்து வருவதால் ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரை டெங்கு நோயின் தாக்கம் இப்பிரதேசத்தில் அதிகரித்து வருவதுடன், இவ்வருடம் ஆரம்பம் முதல் இதுவரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 220 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரென, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
4 hours ago