2025 மே 03, சனிக்கிழமை

மதியழகனின் நூல் அறிமுகம்

Editorial   / 2018 ஜூன் 28 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான  வி.என்.மதியழகன் எழுதிய “வி.என்.மதியழகன் சொல்லும் செய்திகள்” எனும் நூல் அறிமுக விழா,  அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள மென்கோ கார்டன் உள்ளக அரங்கில் நாளை (29) மாலை 04.30க்கு இடம்பெறவுள்ளது.

சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், பிறை எப்.எம். சந்தைப்படுத்தல் முகாமையாளர், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் எஸ்.ரபீக், பிறை எம்.எம். கட்டுப்பாட்டாளர் பசீர் அப்துல் கையூம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளார்கள்.

ஒலிபரப்பாளர் ஒருவரால் வெளியிடப்படுகின்ற ஒலிபரப்புக் கலை தொடர்பான வழிகாட்டல் நூல், தலைநகருக்கு அப்பால் வெளியிடப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X