2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

மத்ரஸா மாணவனின் மரணம் ; நால்வருக்கு பிணை

Janu   / 2024 மார்ச் 07 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் உயிரை  மாய்த்துக்கொண்ட   நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் கைதான   4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில்  விடுவிக்க  கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன்  புதன்கிழமை(6) உத்தரவிட்டுள்ளார் .

குறித்த  4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும்   குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்   விடயங்களை ஆராய்ந்த நீதிவான்    குறித்த  நால்வருக்கும்  , தலா 10 இலட்சம் ரூபாய் சரீர பிணை ,மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல்,  குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை  நீதிவான் உத்தரவிட்டுள்ளார் .

மேலும்  மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல்  நீடிக்கபட்டு   எதிர்வரும்  மார்ச் மாதம் 20  திகதி வரை வழக்கினை ஒத்தி  வைக்குமாறு  நீதிவான்  உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X