Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் மனைவியை தீ மூட்டி கொலைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவரை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார்.
காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே இவ்வாறு தீ மூட்டப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
3 hours ago