2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

மனைவியை கொலைசெய்த கணவனுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சந்தேக நபரான கணவனை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் உத்தரவிட்டார்.

காயங்களுக்குள்ளான கொலைச் சந்தேக நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கண்ணகிபுரம் பிரதேசத்திலுள்ள வீடென்றில் நேற்று (10) காலை கணவன், மனைவி இருவருக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தனக்குதானே கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மகேந்திரன் கலைச்செல்வி (18 வயது) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X