2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மனைவியை தாக்கி கணவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 நவம்பர் 15 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஹீம் முஹம்மட் புஹாரி

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கடந்த வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இது பற்றி கேள்வியுற்ற மனைவி, கணவரிடம் இது விடயமாக வினவியுள்ளார்.

இதன்பின்னர், அவர் அவருடைய மனைவியை பல முறை தாக்கியதாகவும் தான் தனது மூன்று பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்த போதும் தன்னை தேடி வந்து தாக்கியதாகவும் பொலிஸில், பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் பின்னரே, குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .