2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி, நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிராக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல ஆசியர் சமூகத்தால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (03) முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான முறைப்பாட்டை, பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல ஆசியர் சமூகத்தின் ஒருங்கிணைப்பாளர் நவாஸ் சௌபீ தலைமையிலான குழுவினர், கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளித்தனர்.

 இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி, அதனடிப்பமையில் வழங்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை தரம் 111க்கான நியமனத்தின் காரணமாக, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .