2025 மே 08, வியாழக்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட முஸ்தீபு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச இடமாற்றக் கொள்கைக்கு முரணாகச் செயற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ. முபாறக் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வருடாந்த இடமாற்றக் கட்டளை பெற்றும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம், காத்தான்குடி சுகாதார சேவைகள் அதிகாரி அலுவலகம், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், சந்திவெளி வைத்தியசாலை உட்பட கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அலுவலகங்களில் பல முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலும், அனைத்து முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ப்படவில்லையெனவும், அரச விதிகள், சுற்றுநிருபங்கள், நிருவாக நடைமுறைகளுக்கு முரணாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

ஒருவார காலத்துக்குள் இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்படாத பட்சத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில்  முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் முபாறக் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X