2025 மே 05, திங்கட்கிழமை

மனித உரிமைகள் பற்றிய இலவச பாடநெறிக்கு விண்ணப்பம் ​கோரல்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

மனித உரிமைகள் சம்பந்தமான பாடநெறி, மனித உரிமைகள் மற்றும் நீதியைப் பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவையால், புலமைப்பரிசில் அடிப்படையில் இலவசமாக வழங்கவுள்ளது.

இப்பாடநெறிக்காக, நாட்டிலுள்ள மூவினங்களையும் சேர்ந்த இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.

தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மனித உரிமைகள் பற்றிய சான்றிதழ் கற்கை நெறி போதிக்கப்பட்டு, சான்றிதழும் வழங்கப்படும்.

சர்வதேச மனித உரிமைகள், சமாதான ஆணையகத்தின் வழிகாட்டுதலில் இடம்பெறவுள்ள இப்பாடநெறி, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தில், வாரத்தின் இறுதி நாள்களில் நடைபெறவுள்ளது.

பாடநெறி, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் போதிக்கப்படும்.

பாட நெறியைத் தொடர்வதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், க.பொ.த உயர்தர பரீட்சையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருப்பதுடன், இரண்டு வருட அரச சார்பற்ற துறை வேலைவாய்ப்பில் அனுபவம் அல்லது மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்த செயற்றிட்டங்களில் ஈடுபட்டுள்ளோர் அல்லது இத்துறையில் ஆர்வமுள்ளவர்ளும், மனித உரிமைகள் பற்றிய துறைகளில் தொழில் வாய்ப்யை எதிர்பார்த்திருக்கும் பட்டப் படிப்பை பூர்த்தி செய்தவர்களும் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்கலாம்.

சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், இலவச கல்வித் திட்டம், மனித உரிமைகள் நீதியைப் பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவை, பிரதான வீதி, அட்டாளைச்சேனை 09 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X