2025 மே 12, திங்கட்கிழமை

மனித சக்தி இல்லாமல் இயங்கக்கூடிய கைத்தறி நெசவு இயந்திரம் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வரும் அப்துல் மஜீத் ஷராப் என்ற மாணவன், மனித சக்தி இல்லாமல் இயங்கக்கூடிய கைத்தறி நெசவு இயந்திரத்தைப் புதிதாகக் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

சுமார் நூற்றாண்டு கடந்து மனிதர்களது சக்தியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த கைத்தறி நெசவு உற்பத்தியில் மாணவனது இந்தக் கண்டுபிடிப்பு, மருதமுனை கைத்தறி நெசவு உற்பத்தியில் பாரிய மாற்றத்தை  ஏற்படுத்தியுள்ளதென, அதிபர் அல்-ஹாஜ் ஏ.எல்.சக்காப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமாக அமைந்துள்ள மருதமுனைக் கிராமம் நெசவு தொழிலுக்கு பெயர்போன கிராமமாகும். மருதமுனையின் கைத்தறி நெசவு உற்பத்திக்கு இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இங்கு சுமார் 85 சதவீதத்துக்கு மேற்பட்ட வீடுகளில் தற்போது நெசவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X