2025 மே 12, திங்கட்கிழமை

மனிதாபிமானப் பணிகளில் இராணுவத்தினரும் மும்முரம்

வி.சுகிர்தகுமார்   / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை இராணுவத்தினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக, அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கான உணவை, இராணுவத்தின் 241ஆம் படைப் பிரிவினர் இன்று (09) வழங்கினர்.

அக்கரைப்பற்று இராணுவ முகாம் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி கேணல் ஜானக விமலரத்ன தலைமையிலான இராணுவத்தினர் இடைத்தங்கல் முகாமுக்கு வருகை தந்து, பொதுமக்களுக்கான ​உணவை வழங்கினர்.

தொடர்ந்து மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

ஆலையடிவேம்பில் 32 குடும்பங்களை சேர்ந்த 96 பொதுமக்களே இவ்வாறு நாவற்காடு நெக்கோட் கட்டடத்தில் உள்ள குறித்த இடைத்தங்கல் முகாமில் கடந்த 7 நாள்களாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X