2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மயக்கமருந்து தெளித்து கொள்ளை

Princiya Dixci   / 2022 மார்ச் 28 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனையில் வீடொன்றுக்குள் நேற்றிரவு (27) புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்துக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மயக்கம் வருவதற்கான திராவகம் தெளிக்கப்பட்டே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் வீட்டில் இருந்த நால்வரே பாதிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை போன்ற காரணங்களால் பல பிரதேசங்களிலும் அதிகமான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .