Editorial / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை “மனாரியன்ஸ் விங்ஸ்-06“ சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில், ஜனாதிபதியின் “வனரோப” தேசிய மரம் நடுகை வேலைத்திட்டத்துக்கு அமைய, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தை கருத்திற்கொண்டு, “மரம் நடுவோம்; மண்ணின் மானிடம் காப்போம்” நிகழ்வு, மருதமுனையில் நாளை (14) நடைபெறவுள்ளது.
மருதமுனை பிரதேசத்தின் சுற்றாடலில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் இந்த மரம் நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதேசத்தின் கல்வி அதிகாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026