2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனையில்; கிருமி தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ் 

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,  சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய, கல்முனை பிரதேசத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில்,  கிருமி தொற்று நீக்கும் பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு கட்டமாக, மருதமுனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுஇடங்கள், குடியிருப்பு, வீட்டுத்திட்டம் அமைந்துள்ள இடங்களிலும் தொற்றுநீக்கி விசிறப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் இன்று (15) முன்னெடுக்கப்பட்டன. 

சாய்ந்தமருது உதவும் கரங்கள் அமைப்பு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மே.எம்.அப்துல் ரஸாக்(ஜவாத்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மனாப், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வை.கே.றஹ்மான், கலீல் முஸ்தபா, பி.எம்.சிபான் உட்பட ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X