2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மருத்துநீரை வீடுகளுக்கு விநியோகிக்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

'சார்வரி' புதுவருடப் பிறப்பை, இம்முறை மக்கள் வீடுகளுக்குள்ளேயே கொண்டாட வேண்டும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், புதுவருடத்தின் முதற் பாரம்பரிய சடங்காக திகழும் மருத்துநீரையும் இலைகளையும், வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச கொரோனா வழிகாட்டல் குழுக் கூட்டத்தில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இக்கூட்டம், காரைத்தீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தலைமையில், வியாழக்கிழமை (9) பிரதேச செயலகக் போர்கூடத்தில் நடைபெற்றது. 

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் குண.சுகுணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பல்வேறுத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

புதுவருட பிறப்பன்று, சகல கோவில்களும்  பூட்டப்படும் என்றும் கோவில் குருக்கள் மட்டுமே, கோவிலுக்குச் செல்ல அனுமதியுன்று என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மருத்துநீரை தயாரிப்பதற்கு, நான்கு கோவில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவது என்றும் மருத்துநீர் பொதிகள் செய்யப்பட்டு,  அந்தந்த கிராமசேவை உத்தியோகத்தர்கள், தொடர்புபட்ட அலுவலர்கள் ஊடாக, வீடு, வீடாக அவற்றை விநியோகிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எனவே மக்கள் மருத்துநீருக்காக வீடுகளிலிருந்து வெளியே வர வேண்டியத் தேவை இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், காரைதீவு மாளிகைக்காடு கடலோர மீன்விற்பனை நிலையத்தில், மீன்களை விற்பனைச் செய்ய 13 பேருக்கு மட்டுமே,  பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X