2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

மறைந்திருந்து தாக்கிய யானை மடக்கிப்பிடிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை  - உகன பிரதேச செயலக எல்லையில் வசிக்கும்  மக்களை அச்சுறுத்தி  வந்த  காட்டு யானையை, கொணாகொல்ல பகுதியில் வைத்து, மூன்று நாள்கள் காத்திருந்து பெரும் முயற்சி செய்து வனவிலங்கு அதிகாரிகள், இன்று (22) அதிகாலை பிடித்துள்ளனர்.

பின்னர் குறித்த காட்டு யானையை மயக்க  ஊசி  செலுத்தி, கனரக வாகனம் மூலம்  ஹோராவபொத்தானை யானைகள்  பாதுகாப்பு மையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் இந்த யானையால், சுகதகம கிராமம், உகண, திஸ்ஸாபுர பிரதேசங்களில் கடந்த வாரம் இருவர் கொல்லப்பட்டனர் என்பதுடன், மக்கள் அச்சத்துடன்  காணப்பட்டனர்.

கிழக்கு வனவிலங்குப் பணிப்பாளர்  எச்.ஜி. விக்ரமதிலகவின் மேற்பார்வையில் பிடிபட்ட குறித்த யானைக்கு, வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கால்நடை மருத்துவர் ஆனந்த தர்மகீர்த்தி, அகலங்கா பினிதிய ஆகியோர் மருத்துவ உதவி வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .