2025 மே 12, திங்கட்கிழமை

மழை காரணமாக திண்மக்கழிவகற்றல் பாதிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த பல நாள்களாகப் பெய்து வருகின்ற மழையால் குப்பை கொட்டுகின்ற பிரதான இடமும் போக்குவரத்துப் பாதையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த இடர்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை சில தினங்கள் தமது இடங்களிலேயே வைத்து, முகாமைத்துவம் செய்து கொள்ளுமாறு, கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவிக்கையில்,

"கல்முனை மாநகர சபையால் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள், பெரிய நீலாவணையிலுள்ள பசளைத் தயாரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தரம்பிரிக்கப்பட்ட பின்னர் அக்குப்பைகள் அங்கிருந்து அட்டாளைச்சேனை பள்ளக்காடு எனுமிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கொட்டப்படுவதே வழமையான நடைமுறையாகும்.

“தற்போது பெரிய நீலாவணை பசளைத் தயாரிப்பு நிலையத்துக்கு செல்கின்ற கடற்கரை வீதி, மழையால் கடுமையாக சேதமுற்றிருப்பதால் அவ்வீதியூடாக  மாநகர சபையின் கனரக வாகனங்கள் குப்பைகளை ஏற்றிச்செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

“அதேவேளை, வெள்ள நிலைமை காரணமாக அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் குப்பை கொட்டுவது அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

“இக்காலப்பகுதியில் தங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், இந்நாள்களில் வீதிகள், பொது இடங்கள், நீர்நிலைகளில் குப்பைகளை வீசுவதைத் தயவுசெய்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X