Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எல்.எம்.ஷினாஸ்
போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்றை மேற்கொள்ளும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (28) விஜயம் மேற்கொண்டார்.
"போதைப்பொருளிலிருந்து விடுதலையான நாடு”, எனும் கருப்பொருளிலில் அமைந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம், ஜனாதிபதியின் போதைப்பொருள் தடுப்புச் செயலணியின் வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்று, கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஏ.எல்.அலாவுதின் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago