Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சட்டம் ஒழுங்கு, காணி, தொழில்வாய்ப்பு போன்ற அதிகாரம், மாகாணத்துக்கு வழங்கப்படுமானால் மத்திய அரசாங்கத்திடம் கையேந்தும் நிலை எமக்கு ஏற்படாது” என, அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
“அதனூடாக நமக்குத் தேவையான அபிவிருத்திகளை நாமே மேற்கொள்ள முடியும். அதற்காகவே, புதிய அரசமைப்பு கொண்டுவரப்பட்டது. இதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்து வருகின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் வகையில், பிரதேச மக்களுக்குத் தெளிவூட்டல் மற்றம் அவர்களின் கருத்துகளை பெற்றுக்கொள்ளும் கருத்தரங்கு, ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“அபிவிருத்திகள் நடைபெறவில்லை என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அது முற்றிலும் தவறான கருத்து. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வருடத்துக்குக் கிடைக்கும் நிதி 10 மில்லியன் ரூபாய் மாத்திரமே.
“ஆனால், பல வழிகளினூடாக பல மில்லியன் ரூபாய் வேலைத்திட்டங்களை நாம் 52 கிராமங்களிலும் முன்னெடுத்துள்ளோம். ஆனாலும், அவற்றையெல்லாம் விளம்பரப்படுத்தி பெருமை தேடிக்கொள்ள மாட்டோம்.
“ஏனென்றால், இவையெல்லாம் நிலைபேறானவை அல்ல. எமக்கு தேவை நிலைபேறான உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே. அதற்காகவே புதிய அரசமைப்பைக் கொண்டுவரப் போராடுகின்றோம்.
“அதேவேளை, கடந்த காலங்களில் கட்சி செயற்பாடுகளில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதனையும் ஏற்றுக்கொள்கின்றோம். அவற்றையெல்லாம் திருத்தி, புதிய பிரதேச சபை உருவாக்கத்துக்காக வெளிப்படைத்தன்மையில் வேட்பாளர்களை தெரிவு செய்வோம்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago