2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாடுகளைக் கடத்திய இருவர் கைது

வசந்த சந்திரபால   / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை அம்பாறை, பிபில நகரில் மடக்கிப்பிடித்ததாகவும் அதில் மாடுகளைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் அம்பாறை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி லசந்த தடல்லகே தெரிவித்தார்.

அம்பாறை பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, இன்று(26) அதிகாலை 5 மணியளவில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில், லொறியை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோது, லொறியில் இருந்த இருவர் தப்பியோட முயற்சித்தனர் எனவும் ஆனால், அதனை முறியடித்து அவ்விருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த 11 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .