2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மாணவர் மீட்பு பேரவை மேற்கொண்ட நிவாரணப்பணி

வி.சுகிர்தகுமார்   / 2020 ஏப்ரல் 18 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார் 

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக மாணவர் மீட்புப் பேரவை மேற்கொண்ட நிவாரணப்பணி, நாவற்காடு பிரிவில் இன்று (18) இடம்பெற்றது.

மாணவர் மீட்புப் பேரவையின் நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியில் காரைதீவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா, ஆலையடிவேம்பின் சமூக செயற்பாட்டாளர் நவனீதராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரணப்பொதியினை வழங்கி வைத்தனர்.

கல்வி தொடர்பான பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துவரும் மாணவர் மீட்பு பேரவை இதுபோன்ற நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .