2025 மே 05, திங்கட்கிழமை

‘மார்.31க்கு முன்னர் மேன்முறையிடவும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 26 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை, 3-I (அ) தரத்துக்கு, மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற முடியாதவர்களும் நேர்முகப் பரீட்சையில் தமது தகைமைகளை நிரூபிக்கத் தவறியவர்களும், தமது மேன்முறையீட்டை, மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியுமென, கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால், பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி நடத்தப்பட்ட மேற்படி போட்டிப்பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சை, கடந்த 12, 13, 14, 15, 16ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட மேற்படி விண்ணப்பதாரர்கள், தமது மேன்முறையீட்டை, செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், திருகாணமலை எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கமாறும், அவர் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X