Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 14 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நாய்பட்டிமுனை உப அஞ்சல் அலுவலகம் 2024.04.02 அன்று தொடக்கம் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என்று பெயராக மாற்றம் செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் தலைவர் ஜெ.எம் றிஸான் (ஹாமி) உட்பட நிர்வாகிகள் கொண்டு வந்ததை தொடர்ந்து 2024.05.31 திகதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறித்த பெயர் மாற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி குறித்த உப தபாற் கந்தோரின் பழைய விளம்பர பலகை அஞ்சல் மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமாரவின் பணிப்புரைக்கு அமைய அகற்றப்பட்டு புதிய விளம்பலகை தற்போது பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய இனிவரும் காலங்களில் நற்பிட்டிமுனை உப தபாற் கந்தோர் என அழைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
18 minute ago
20 minute ago
20 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
20 minute ago
28 minute ago