2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

மாவீரர் குடும்பங்களுக்கு உலர்வுணவுப் பொதிகள் விநியோகம்

எஸ்.கார்த்திகேசு   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாவீரர் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், மனைவிமார் ஆகியோருக்கு,  தியாகத் தீபம் திலீபனின் நினைவாக மக்கள் நலன் காப்பகத்தின்  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, மக்கள் நலன் காப்பகத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளையின் தலைமையில், இன்று (26) இடம்பெற்றது.

இதன்போது ,தலா ஒரு குடும்பத்துக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மக்கள் நலன் காப்பகத்தின வடக்கு, கிழக்கு இணைப்பாளர் வீரா, நிதிப் பொறுப்பாளர் விதுரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .