எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 28 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் மாதாந்த மின் கட்டணத்தைச் செலுத்தாத மின் பாவனையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தி மின் இணைப்புத் துண்டிப்பை தவிர்த்துக் கொள்ளுமாறு, கல்முனைப் பிராந்திய மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
மின் விநியோகம் துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல், மின்சாரக் கட்டணம் நிலுவையிலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், மாளிகைக்காடு, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை பிரதேச மின் பாவனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு மாதத்துக்கும் மேலான கட்டணத்தைக் கொண்டிருப்பவர்களின் மின் துண்டிப்புச் செய்யப்படவுள்ளதோடு, அவ்வாறு இணைப்புதுண்டிக்கப்படுமிடத்தில் மீள் இணைப்பை ஏற்படுத்துவதற்காக, முற்று முழுதான மின் நிலுவைக் கட்டணம், தண்டப்பணம், மீள் இணைப்புக் கட்டணம் என்பன செலுத்த வேண்டுமென, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாதாந்த மின்சாரப் பட்டியலில் காணப்படும் நிலுவையை உடனடியாகச் செலுத்தி மின் துண்டிப்பைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, மின் பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
மின் துண்டிக்கப்பட்டு 03 மாதங்களுக்குள் மீண்டும் மின்சாரத்தை பெற்றுக் கொள்ளாவிடின் உரிய இடத்திலுள்ள மின் மானியுடன் ஏனைய இலங்கை மின்சார சபையின் உபகரணங்களும் அகற்றப்படுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago