2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மின்சார சபை உப அலுவலகம் அமைக்க முயற்சி

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார சபையின் உப அலுவலகம் இன்மையால், மின்சார சபையின் உட்சபட்ச சேவையை பெற்றுக்கொள்வதில் பாவனையாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, முன்னறிவித்தலற்ற மின் தடை, திருத்த வேலைகளுக்கான காலதாமதம், மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை  கவனத்திற்கொள்ளாமை மற்றும் காலதாமதமான சேவை  போன்ற பல பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, இறக்காமம் பிரதேசத்துக்கான தனியான மின்சார சபை உப அலுவலகத்தை அமைப்பது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு மின்சார சபையின் சேவையை சிறந்த முறையில் வழங்கவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலான உயர்மட்டக் கலந்துரையாடல், அம்பாறை பிராந்திய பிரதம பொறியியலாளர் காரியாலத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்றது.

அம்பாறை பிராந்திய பிரதம பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் மற்றும் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஜெமீல் காரியப்பர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது விடயங்களை கேட்டறிந்த பிரதம பொறியியலாளர் பர்ஹான், மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்துவதாகவும் பிரதேசத்துக்கான தனியான மின்சார சபை உப அலுவலகத்தை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மின் பாவனையாளர்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் மின்சார சபையின் சேவைகளை வழங்குவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X