2025 மே 03, சனிக்கிழமை

மின்சார வேலியில் சிக்கி சிறுவர்கள் இருவர் பலி

Freelancer   / 2022 மார்ச் 12 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள நெய்னாகாடு கிராமத்தின் பட்டம்பிட்டிய எனும் பின்தங்கிய இடத்திலுள்ள தென்னத்தோப்பில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 13 வயதுடைய சிறுவர்கள் இருவர், இன்று (12) மதியம்    உயிரிழந்துள்ளனர்.

குறித்த தென்னத்தோப்புக்கு வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற போது றியாஸ் முஹம்மட்  ஆசீக் (13வயது) முஹம்மட் இப்றாஹிம் (13 வயது) என்ற
இரண்டு சிறுவர்களே மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X