2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி யானை இறப்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் யானை ஒன்று இறந்த சம்பவம், இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் இறால் வளப்பு பிரதேசத்தில் புகுந்த யானை, இறால் பண்னைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார வயரை இழுத்த நிலையில், வயர் அறுந்து மின்சாரம் தாக்கியதில் குறித்த யானை இறந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிரான் காரியாலய அதிகாரிகளுடன் இணைந்து வாழைச்சேனை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .