2025 மே 02, வெள்ளிக்கிழமை

மின்விளக்குகளைப் பொருத்துமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில், இரவு நேரத்தில் பயணம் செய்வோரின் நலன்கருதி அட்டாளைச்சேனை, பாலமுனை, மீனோடைக்கட்டு, எல்லைப் பிரதேசத்தில் மின்விளக்குகளைப் பொருத்துமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, பொதுமக்கள் இன்று (25) மகஜர் ஒன்றை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

"இவ்வீதியை, வயல் மற்றும் ஆறுகள் ஊடறுத்துச் செல்வதால், இரவு நேரங்களில் பயணிப்போர் காட்டு யானைகளினதும் முதலைகளினதும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதுடன், இரவு வேளையில், இவ்வீதி அதிக இருள் சூழ்ந்து காணப்படுவதால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன" என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், விரைவில் இப்பிரதேசத்தில் தெரு மின் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அம்மகஜரில் கோரப்பட்டுள்ளதென, மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X