Princiya Dixci / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியிலுள்ள நகைக்கடை ஒன்றில், பட்டப்பகலில் கொள்ளையிட்ட சந்தேகத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, நேற்று (26) பிற்பகல் நகைக் கடைக்குள் நுழைந்த சந்தேகநபர், கடையில் இருந்த நபருக்கு மிளகாய்த் தூள் விசிறி நகைகளைக் கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, நகைக் கடையில் இருந்த நகைக்கடை உரிமையாளரின் மருமகனுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் சண்டையிடும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த நபரை மடக்கிப் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக, கடை உரிமையாளர் தெரிவித்தார்.
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025