Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
றீ.கே.றஹ்மத்துல்லா, வா. கிருஸ்ணா
உலக மீனவ தினத்தை முன்னிட்டு, மாபெரும் மக்கள் விழிப்புணர்வு ஊா்வலமும் கருத்தரங்கும், நாளை (21) இடம்பெறவுள்ளதாக, அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கே. இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இந்த மக்கள் விழிப்புணர்வு, “நீல பசுமை பொருளாதார இலக்கினுள் மறைத்து மேற்கொள்ளப்படும் வள சுரண்டலை நிறுத்துக” எனும் தொனிப்பொருளில், பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.
இது தொடா்பாக மக்களை விழிப்பூட்டும் முன்னேற்பாடுகள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாபெரும் நிகழ்வில், வள சுரண்டலை நிறுத்தல், மக்களை மையப்படுத்தி, மீனவ விவசாய மற்றும் காணி தொடர்பான தேசிய கொள்கைகளினூடக உணவுத் தன்னாதிக்கத்தை உறுதி செய்யதல் ஆகியவற்றை வலியுறுத்தி, பிரகடனம் செய்யப்படவுள்ளன.
நடைபெறவுள்ள 22ஆவது உலக மீனவத் தினத்தை, பொலன்னறுவை நன்னீர் மீனவ அமைப்பு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன ஏற்படு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago